நெதர்லாந்தில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடைபெற்ற பகுதியில் கொத்துக்கொத்தாக குருவிகள் செத்து மடிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் திரைக்கு வந்துள்ள ‘2.O’ திரைப்படம், சிட்டுக்குருவிகள் அழிவுக்கு செல்போன் கோபுரங்களும், செல்போன்களும் தான் காரணம் என்கிற மையப்புள்ளியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் படம் பார்த்த அனைவருக்க‌மே எழுந்தது.

ஆனால் செல்போன்களுக்கும், செல்போன் டவர்களுக்கும் சிட்டுக் குருவிகள் மரணத்தில் தொடர்பில்லை என ஆய்வறிக்கைகள் கூறின. இருப்பினும் செல்போன் டவர்கள் மற்றும் கதர்வீச்சால் குருவிகளின் இதயங்கள் பலவீனமடைந்து அவை இறப்பதாக சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன் அதன் கதிர் வீச்சு அதிகரிக்கும் போது, அனைத்து உயிரினங்களுக்குமே ஆபத்தாக அமையும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் நெதர்லாந்தில் அமைந்துள்ள தி ஹேக் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி 5ஜி தொழில்நுட்பத்திற்கான சோதனை நடத்‌தப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஹூகைன்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் கொத்துக்கொத்தா‌க உயிரிழந்தன. 5ஜி மூலம் அதிவேகமும், துல்லியமான இணைய சேவையும் கிடைத்தாலும், செல்போன் டவர்களின் கதிவீச்சுகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருக்கிறது. இதனால் பறவைகள் இனம் அழிவதற்கான வாய்ப்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது.

Dailyhunt
error: Content is protected !!