6 நிமிடத்தில் 196 நாடுகளின் பெயர்கள் ஆச்சர்யப்படுத்தும் 2 வயது விழுப்புரம் சிறுவன் நினைவாற்றல்

அதே போல் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நிகில் பிரஜன் தன்னுடைய நினைவாற்றல் மூலமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான். எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் மழலை மொழியில் அந்த நாட்டின் தலைநகரின் பெயரைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தும் நிகில் பிரஜன் “வொன்டர் ஃஆப் புக் ரெக்கார்ட்’’ ( Wonder of book record) சாதனைப் படைத்துள்ளான். இது தொடர்பாக நிகில் பிரஜன் அம்மா சில்வியாவிடம் பேசினேன்.

சிறுவன் நிகில் பிரஜன்
“நிகிலுக்கு இப்போது 2 வயது ஆகிறது.196 நாடுகளின் பெயர்களையும் 6 நிமிடத்தில் சொல்லி ஆச்சர்யப்படுத்துவான். நாடுகளின் தலைநகரங்கள், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்கள், மாவட்டங்கள் என எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடுவான். உலக வரைபடங்கள் மூலமாக ஒன்றரை வயதில் விளையாட்டாகக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம். ஒருமுறை கற்றுக்கொடுப்பதை எப்போதும் கேட்டாலும் சரியாகச் சொல்லிவிடும் நினைவாற்றல் அவனுக்கு இருப்பதை உணர்ந்தோம்.

error: Content is protected !!