சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் இயங்கும் சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி விபரப் பதிவாளர் (Data Entry Operator) (மாதச் சம்பளம் ரூ.12,000/-) காலிப் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு மற்றும் கணினி அறிவுடன் கூடிய 25 முதல் 35 வயதிற்குட்பட்டவராக 01.01.2019 அன்று இருத்தல் வேண்டும். சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை சமூக நல ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு 28.01.2019 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இது குறித்த விண்ணப்ப படிவம் என்ற இணையதளத்தில் www.tnsocialwelfare என்ற தலைப்பில் IEC சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!