வாஷிங்டன்: பூமிக்கு அருகே டிச.16ம் தேதி (இன்று) 46b/விர்டேனன் என்ற வால்நட்சத்திரம் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. இதை பைனாகுலர் மூலமாகவோ அல்லது வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 11.4 மில்லியன் கி.மீ., தொலைவில் இந்த நட்சத்திரம் டிச.16ல் (இன்று) வர உள்ளது. இது போன்ற நிகழ்வு பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். இந்த நட்சத்திரம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் கார்ல் விர்டானன் என்பவரால் 1948 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!