வீடு தேடிவரும் புத்தகங்கள்

ஒரு வலைதளத்தில் நுழைந்து புத்தகம் வாங்க சிரமப்படும் எத்தனையோ கோடி பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரப்பிரசாதம்தான் டயல் ஃபார் புக்ஸ். கிரெடிட் கார்ட் வேண்டாம், இணைய இணைப்பு வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும்.
நாம் 9445901234 என்ற எண்ணை அழைத்ததும், அது வேறொரு எண்ணுக்கு மாற்றப்படுகிறது. அங்கே தானியங்கிக் குரல் கேட்கிறது. பிறகு நம் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. பின்னர் டயல் ஃபார் புக்ஸில் இருந்து நம்மை திரும்ப அழைக்கிறார்கள். நமக்கு என்ன புத்தகம் தேவை, அதன் விலை என்ன, என்று எல்லாம் கேட்டுக்கொள்கிறார்கள். நம் முகவரியை வாங்கிக்கொண்டு புத்தகத்தை விபிபி-யில் அனுப்பி வைக்கிறார்கள். 250 ரூபாய்க்கு மேல் வாங்கினால் விபிபி செலவையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
044-49595818 என்ற எண்ணையும் அழைக்கலாம். அல்லது 9500045609 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும் புத்தகங்களின் தேவையைச் சொல்லலாமாம். வாட்ஸ்அப், போன் அழைப்பு என்று எல்லா வகைகளிலும் ஆர்டரை வாங்கிக் கொள்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டுக்கு டயல் ஃபார் புக்ஸ் சேவை அவசியத் தேவை.

error: Content is protected !!