CAT நுழைவுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் படைத்து உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார்.  22 வயதான இவர் மும்பை ஐஐடியில் எம்.டெக். படித்து வருகிறார்.

மேலாண்மையியலுக்கான எம்பிஏ நுழைவுத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. இயந்திரவியல் பொறியாளரான பிரசாத், தேர்வில் 100% பெற்றுள்ளார்.

என்னுடைய பெற்றோர், சீனியர்கள், நலம் விரும்பிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, முடிவெடுப்பேன். ஆனால் எம்பிஏ படிப்பது என்று முடிவெடுத்துவிட்டால், ஐஐஎம் – அகமதாபாத் என்னுடைய தேர்வாக இருக்கும்..

CAT நுழைவுத் தேர்வுக்காக தினசரி இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் படித்தேன். ஓய்வு நேரங்களில் செஸ் விளையாடுவேன், நீந்துவேன்.

CAT நுழைவுத் தேர்வில்  100% மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் 11-வது நபராக இணைகிறேன். என்னுடைய வெற்றிக்காக உத்வேகமூட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார் பிரசாத்.

error: Content is protected !!