தேசிய அதிவிரைவு செஸ் போட்டி: வின்ஸ் பள்ளி மாணவர் சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் 2 ஆம் இடம் பெற்றார்.

மதுரை செஸ் அகாதெமி நடத்திய தேசிய அளவிலான  அதிவிரைவு செஸ் போட்டியில் 9 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில்  சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி 4 ஆவது வகுப்பு மாணவர்  ஜெய்வந்த் 2 ஆம் இடம் பெற்று சாதனை படைத்தார்.
மேலும்,  குமரி மாவட்ட அளவில் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஓபன் செஸ் போட்டியில்  9 வயதுக்குள்பட்டோர் பிரிவில்  7 சுற்றுகளிலும் வென்று முதலிடம் பெற்றார். தக்சின் சகோதயா சார்பில் நடைபெற்ற தென்மாவட்ட சிபிஎஸ்இ  பள்ளிகளுக்கிடையிலான  செஸ் போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் ஜெயவந்த், அன்சாய் ரெமீஸ், ஸ்டிஜோ பேட்டிஸ்ட்,  ஸ்டேனிஸ் ஆகியோர் 2 ஆம் பெற்றனர்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற  விழாவில் சாதனை படைத்த மாணவர் ஜெய்வந்துக்கு  வின்ஸ் கல்வி குழுமங்களின்  நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான  நாஞ்சில் வின்சென்ட்  கோப்பையும், பள்ளிச் செயலர் கிளாரிசா வின்சென்ட்  சான்றிதழும் வழங்கிப் பாராட்டினர். முதல்வர் லதா, துணை முதல்வர் டெல்பின் ஜெமீலா, ஆசிரியர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!