கோபிசெட்டிபாளையம்:பிளஸ் 2 வகுப்பில், பாடங்களை குறைத்து செயல்படுத்துவது குறித்து, பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறை மூலம், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். தமிழகம் அனைத்து துறைகளிலும், முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாதிரியான பாடத்திட்டங்களை உருவாக்குகிறது. இந்தியாவே வியக்கும் அளவுக்கு, தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்பினருக்கு, பாடத்தில் கூடுதல் சுமை உள்ளதாகவும், கற்க நாட்கள் போதவில்லை எனவும் கோரிக்கைகள் வந்துள்ளன. அதனால், பாடங்களை குறைத்து செயல்படுத்துவது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது.தமிழகத்தில் திறனாய்வு தேர்வை, 1.70 லட்சம் பேர் எழுதுகின்றனர். கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை, மாணவர்களுக்குகற்றுத்தரவும், பயிற்சி அளிக்கவும், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!