நாகர்கோவிலில் இன்று த னியார் துறைவேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐ.டி.ஐ., ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!