‘விமான படை கண்காட்சியில் பங்கேற்கலாம்’

சென்னை: விமான போக்குவரத்து துறை சார்பில், பெங்களூரில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து, பெங்களூரில், சர்வதேச விமான கண்காட்சியை நடத்த உள்ளன. இந்த கண்காட்சியில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை, காட்சிக்கு வைக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநில பள்ளி, கல்லுாரி மாணவர்களும், கண்காட்சியில் தங்களின் படைப்புகள் இடம்பெற, பதிவு செய்ய வேண்டும். இதில், ராணுவம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் விமான உதிரி பாகங்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் இடம்பெறும். மேலும் விபரங்களை, mhrd.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!