கோபிசெட்டிபாளையம் :”தமிழகத்தில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்,” என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உயர்கல்வியை பொறுத்த வரை, இந்தியாவில், 25.6 சதவீதம் பேர் பயில்கின்றனர். ஆனால், இலவசமாக, 14 பொருட்கள் வழங்கியதன் அடிப்படையில், 48.9 சதவீதம் மாணவர்கள் பயின்று, உயர்கல்வியில், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது.தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, அரசு வக்கீல், நீதிமன்றத்தில் விளக்கமாக தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பல இடங்களில், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்த ஆசிரியர்களை, அந்தந்த கோட்டா படி, பணியில் அமர்த்த ஆறு மாதங்களாகும்.அதுவரை, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது; ஆசிரியர் தேர்வு மூலம், தேர்வு செய்யப்பட்டால் தான், ஆசிரியர்களாக பணியமர்த்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!