கூட்டு ஆராய்ச்சி: இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த சோடாகார்போ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை ஐஐடியின் வேதிப் பொறியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு, இத்தாலி சென்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வளாகத்தை பார்வையிட்டுவந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நிறுவனங்களும் பயோ-மாஸ் வாயு உற்பத்தி, கரியமில வாயுவிலிருந்து மெத்தனால் உருவாக்குவது போன்ற ஆராய்ச்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படும். அதோடு, ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மாணவர் பரிமாற்றமும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!