சென்னை: தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கப்பட உள்ளன.

error: Content is protected !!