திண்டுக்கல்:டிச.,19ல் துவங்க உள்ள ‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வு எழுதும் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துச் சென்று சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டுக்கான ‘நெட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வு டிச.,19ல் துவங்கி டிச.22 வரை நடக்கிறது. முதல் தாள் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரையும், இரண்டாம் தாள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் நடக்கும்.கடந்த முறை ஓ.எம்.ஆர்., ஷீட்டில் தேர்வு எழுதினர். இம்முறை ‘ஆன்லைனில்’ எழுத உள்ளனர்.பென்சில் பாக்ஸ், புத்தகம், அலைபேசி, பர்ஸ், பேப்பர் உட்பட எதையும் எடுத்துச்செல்லக்கூடாது.
விண்ணப்பிக்கும்போது சர்க்கரை நோய் உள்ளதா என கேட்கப்பட்டிருந்தது. அதில் ‘ஆம்’ என குறிப்பிட்டுள்ளவர்கள், ‘சுகர்’ மாத்திரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றையும், தண்ணீர் பாட்டில்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்லலாம். பாக்கெட்டில் அடைக்கப் பட்ட சாக்லேட், மிட்டாய், சாண்ட்விச் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!