திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திறந்த நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேர்க்கை மையம் மூலமாகவும், பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மூலமாகவும் சேர்க்கை பெறலாம்.
அல்லது ஆன்-லைனிலும் சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!