சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை தவறாமல் நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26 ஆம் தேதிகளில் பெற்றோர் – ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வரும் ஜனவரி 26- ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் – ஆசிரியர் கழகக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில், மாணவர்களின் வளர்ச்சி, பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!