அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 56 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., போன்ற, மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,250 இடங்கள் உள்ளன. டிப்ளமா படிப்புகளுக்கு, 293 இடங்கள் உள்ளன. இந்த டிப்ளமா படிப்புகளையும், பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதலாக, 157 பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரியிருந்தது. அதில், 56 இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. இந்த இடங்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘அனுமதி கோரப்பட்ட, 157 இடங்களில், 56 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த கல்வியாண்டிற்குள், கூடுதலாக, 50 இடங்களுக்கு மேல் அனுமதி பெற முயற்சி எடுக்கப்படும்’ என்றனர்.

error: Content is protected !!