சென்னை, ‘டிப்ளமா’ இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிப்ளமா சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல், உண்மைக்கு மாறானது என, ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் துணை தலைவர், புனியா வெளியிட்ட அறிவிப்பில், ‘டிப்ளமா மாணவர்களுக்கு, கல்லுாரி தேர்வுகளை தவிர, வேறு எந்த தேர்வும் புதிதாக நடத்தப்படாது’ என, தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!