பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வெள்ளியன்று தொடங்கும்

பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி வெள்ளியன்று தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவித்தபடி, பிப்ரவரி 1-ம் தேதி செய்முறைத் தேர்வு நடைபெறுமா அல்லது தேர்வு தேதி மாற்றப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில் இது குறித்து தேர்வுத்துறை மற்றும்
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி
செய்முறைத் தேர்வு நடைபெறும். தேர்வுத்துறை பணியாளர்களின் போராட்டத்தால் தேர்வுப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தனர்.

error: Content is protected !!