தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுஉள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

error: Content is protected !!