‘கிராமப்புற விஞ்ஞானி’ விருதுக்கு, தகுதியானவர்களை பரிந்துரை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

‘கிராமப்புற மக்களின் அறிவு திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள, புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வர, இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு, ஆண்டுதோறும், கிராமப்புற விஞ்ஞானி விருது வழங்க வேண்டும். அவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்க வேண்டும்’ என, அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, நடப்பாண்டு முதல் செயல்படுத்த, அரசு முன்வந்துள்ளது. இதற்கு, வயது வரம்பு, கல்வித் தகுதி எதுவும் கிடையாது. மக்களுக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை தந்தவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படும்.அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமப்புற விஞ்ஞானிகளை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை, விருதுக்கு பரிந்துரை செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சகாயம் கடிதம் அனுப்பி உள்ளார்.

error: Content is protected !!