அறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குமரி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவிகள் பள்ளியின் சார்பில் பாராட்டப்பட்டனர்.

குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் வடக்குதாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில்   10  ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிவலட்சுமி, பேபிலாவண்யா ஆகியோர் 2 ஆம் இடம் பெற்றனர்.  இம் மாணவிகளை  தலைமை ஆசிரியர் மரியஜான்துரைராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பகவதி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆறுமுகம்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!