மாநிலஅளவில் நடத்தப்பட்ட அடைவுதிறன் தேர்வில்;( SLAS ) கன்னியாகுமரி மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம்

அனைவருக்கும் கல்வி இயக்கமும்; தொடக்ககல்விதுறையும் இணைந்து மாணவர்களின் கற்றல் அடைவுதிறனைமேம்படுத்தநடவடிக்கை எடுத்ததன் விளைவாக2015-2016 ஆம் கல்விஆண்டில் மாநிலஅளவில் நடத்தப்பட்ட அடைவுதிறன் தேர்வில்;( SLAS ) கன்னியாகுமரி மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம் பெற்றுள்ளது.

மேற்படிதேர்வுதமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 413 வட்டாரவளமையங்களில்நடைபெற்றது. கன்னியாகுமரிமாவட்டத்தில் 9 வட்டாரவளமையங்களில் 234பள்ளிகளில் 3இ5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்குஐனவரி(2016)  5 முதல் 8 ஆம் தேதிவரைமாநிலஅளவில் அடைவுதேர்வுநடத்தப்பட்டது .அடைவுதேர்வுகள் 3மற்றும் 5ஆம் வகுப்பிற்குதமிழ் ,ஆங்கிலம் மற்றும் கணிதபாடத்திற்கும் 8ஆம் வகுப்பிற்குதமிழ் ,ஆங்கிலம்;,கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கும்  நடத்தப்பட்டது.

மாநிலஅளவில் நடத்தப்பட்டஅடைவுதிறன் ;( SLAS ) தேர்வின்; முடிவுகள் மார்ச் மாதம் இரண்டாவதுவாரத்தில் வெளியிடப்பட்டது.இதிலகன்னியாகுமரிமாவட்டம் 3 ஆம் வகுப்பில் தமிழ் ,ஆங்கிலம் மற்றும் கணிதபாடத்திற்கு மாநிலஅளவில் முதலிடமும், 5 ஆம் வகுப்பில் தமிழ் ,ஆங்கிலம் மற்றும் கணிதபாடத்திற்குமாநிலஅளவில் முதலிடமும், 8 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்திற்குமாநிலஅளவில் முதலிடமும்,ஆங்கிலம் மற்றும் கணிதபாடத்திற்கு  இரண்டாவது இடமும் ,அறிவியல்  பாடத்திற்கு மாநில அளவில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது;

மாநிலஅளவில்முதலிடம் பெற்றதற்காககன்னியாகுமரி மாவட்டஆட்சியரால் அனைத்து உதவி தொடக்ககல்விஅலுவலர்கள், தலைமையாசிரியர்கள்,அனைத்துஆசிரியர்கள் ,மேற்பார்வையாளர்கள் (பொ),அனைத்துஆசிரியர்பயிற்றுநர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெவிக்கப்பட்டது.மேலும் 18.3.2016 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான மீளாய்வு கூட்டத்தில் முதன்மைகல்விஅலுவலரால்;,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்பிற்கு பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் தலைமையாசிரியர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு உதவிதொடக்கஅலுவலர்களால் வழங்கப்படும் எனவும் முதன்மைகல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!