குமரி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  பரிசுத் தொகைக்கு வெள்ளிக்கிழமைக்குள் (டிச.14) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017-18  ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 5, 6 ஆம் தேதிகளில்  நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் முதல் பரிசாக ரூ. ஆயிரம் வீதமும், 2  ஆம் பரிசாக ரூ. 750 வீதமும், 3 ஆம் பரிசாக ரூ. 500 வீதமும் வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற சில விளையாட்டு வீரர்கள் தங்களது வங்கி கணக்கு எண்ணை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
எனவே, வெற்றி பெற்ற வீரர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தக நகலை கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வெள்ளிக்கிழமைக்குள்( டிச.14) வழங்கிட வேண்டும்.  தவறும்பட்சத்தில் வெற்றி பெற்றவர்களின் பரிசுத் தொகை தலைமை அலுவலகத்தில் திரும்ப செலுத்தப்படும். அதற்குப்பின் அந்த வீரர்கள்  பரிசுத் தொகை மற்றும் பயிற்சி முகாமிற்கான தொகையை பெற இயலாது. மேலும் விவரங்களுக்கு, 04652-232060 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!