விஸ்வாசபுரம் எல்.எச்.எல். சிபிஎஸ்இ பள்ளியில் 4ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிறுவனர் ஹென்றிலூயிஸ், தாளாளர் அனிதா ஹென்றி ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, போட்டிகளை தொடங்கிவைத்தனர். பின்னர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டு, தீப ஒளி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பிரமீடு, மின்னல் வளையங்களின் அணிவகுப்பு, வண்ண மயமான அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன. ஓட்டம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.பிரைட் செல்வகுமார், போட்டிகளை வழிநடத்தினார்.

 

error: Content is protected !!