• சென்னை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்து வடிவான பிராமி எழுத்துருவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ள திருக்குறள் நுால், இன்று வெளியிடப்படுகிறது.திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் எழுத்தின் வடிவம் எப்படி இருந்தது என்பது, தமிழ் அறிஞர்கள் கூட அறியாத நிலை உள்ளது.இதைப் போக்கி, தமிழின் எழுத்து வளர்ச்சியை பற்றி அறியவும், தமிழ் பிராமி எழுத்துகளை கற்கவும் உதவும் வகையில், தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய, திருக்குறள் நுாலை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ளது.இந்த நுாலை, சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர், பழனிசாமி வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செய்துள்ளது.
error: Content is protected !!