குரூப் 4 தேர்வு முடிவுகள் அறிவிப்பு

TNPSC Group 4 Result 2018: டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

TNPSC CCSE 4 Cut Off Marks 2018-2019: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இந்த முறை TNPSC CCSE 4 என்ற பெயரில் நடத்தப்பட்டது. காரணம், வழக்கமான குரூப் 4 தேர்வுடன் வி.ஏ.ஓ பதவிக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்பட்டதுதான்!

 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பொதுப் பிரிவினர், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர், பட்டியல் வகுப்பினர் என ஒவ்வொரு தரப்புக்கும் மாறுபடும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து அறிவிக்கும்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வி.ஏ.ஓ, டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், ஸ்டெனோ-டைப்பிஸ்ட் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் சுமார் 9,500 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை இருபது லட்சம் பேர் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!