தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.20) முதல் சனிக்கிழமை (டிச.22) வரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான்கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதுதவிர, வடகிழக்கு பருவமழை காலத்தில் பருவக்காற்று வீசும். இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் வியாழக்கிழமை (டிச.20) முதல் சனிக்கிழமை (டிச.22) வரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று வறண்ட வானிலை: தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை (டிச.19) வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார் அவர்.

error: Content is protected !!