சென்னை: ‘தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை முதல் வறண்ட வானிலை நிலவும்; அதிக மழை இருக்காது’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின், முக்கிய மழை பருவமான, வட கிழக்கு பருவமழை காலம் தற்போது நடந்து வருகிறது. இந்த காலத்தில், அதிக புயல்கள் உருவாவது வழக்கம். அதேபோல, தமிழகத்தின் நீர்நிலைகளுக்கு, அதிக நீராதாரங்களையும், வடகிழக்கு பருவமழை வழங்கும்.இந்த ஆண்டு, நவம்பர், 1ல் பருவமழை துவங்கியது. முதல் ஒரு வாரத்திற்கு, சென்னை முதல், டெல்டா மாவட்டங்கள் வரையும், தென் மாவட்டங்களிலும், ஓரளவு மழை பெய்தது. நவ., 16ல், ‘கஜா’ புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கியது. அதன்பின், தமிழகத்துக்கான மழை பெருமளவு குறைந்துள்ளது. டிச., 6 முதல், 10 நாட்களாக குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்யவில்லை.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியுள்ளது. ‘பெய்ட்டி’ என, பெயரிடப்பட்டுள்ள, இந்த புயலால் மழை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது; அதுவும் நடக்கவில்லை. புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், நாளை முதல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலையே நிலவும் என, கணிக்கப்பட்டுள்ளது.’வரும், 22ம் தேதி வரை, பகலில் வெயிலும், இரவில் குளிரும் இருக்கும். சில இடங்களில் மட்டுமே, திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. மழை தரும் காற்றழுத்த நிலைகள் எதுவும், தற்போது இல்லை’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்க கடலில் உருவான, ‘பெய்ட்டி’ புயல், நேற்று மாலை நிலவரப்படி, மணிக்கு, 19 கி.மீ., வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இது, சென்னைக்கு கிழக்கே, 300 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்தது. புயலானது, சென்னைக்கு, 200 கி.மீ., கிழக்கில் வங்க கடல் வழியே, ஆந்திராவை கடந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது.புயல் தீவிரம் அடைந்து, இன்று பிற்பகல் அல்லது மாலையில் replica rolex watches, நெல்லுார் மற்றும் காக்கிநாடா இடையே, மசூலிபட்டினம் அருகே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.புயல் ஆந்திராவில் நுழைந்ததும் வலுவிழக்கும். அதன்பின், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில், காற்றுடன் கூடிய மழை பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!