ஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, அமெரிக்க வாழ் இந்தியர்களான, காவ்யா கொப்பாரப்பு, ரிஷப் ஜெயின், பிரிட்டன் வாழ் இந்தியரான அமிகா ஜார்ஜ் இடம் பெற்று உள்ளனர்.

எட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயதான, ரிஷப் ஜெயின், புற்றுநோயைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய, கணினி வழிமுறையை வடிவமைத்து உள்ளார்.ஹார்வர்டு பல்கலையில் படிக்கும், 18 வயதான, காவ்யா கொப்பாரப்பு, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் திசுக்களை, கணினியில் ஆராயக்கூடிய வழிமுறைகளை வகுத்துள்ளார்.

பிரிட்டனில் படித்து வரும், 19 வயதாகும், அமிகா ஜார்ஜ், மாதவிடாய் காலத்தின் போது, அதற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

error: Content is protected !!