மும்பை : சாதனை… சாதனை… ஒரேநாளில் 1007 விமானங்களை கையாண்டு சாதனைப்படைத்துள்ளது மும்பை விமான நிலையம்.


மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமானநிலையம், நேற்று மட்டும் 1,007 விமானங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.


இந்தாண்டின் ஜூன் மாதத்திலேயே மும்பை சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட், 1,003 விமானங்களை கையாண்டு சாதனை படைத்திருந்தது. தற்போது, அந்த சாதனையை, அதே ஏர்போர்ட்டே முறியடித்துள்ளது.


முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண நிகழ்விற்காகவே, இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!