உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர். இந்த புதிய கட்டண முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.

இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

ரூ.50க்கான கட்டணம் செலுத்தியவர்கள் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.

error: Content is protected !!