எந்த நேரத்திலும் 8.5 ரிக்டர் அளவில் இமயமலைப் பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என பெங்களூரு ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமயமலைப் பகுதிகளில் கடந்த 600-700 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு நில் அதிர்வும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதற்குப் பிறகு 1897, 1934 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் மிகப் பெரிய பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இவை ரிக்டர் அளவு கோலில் 7.9 லிருந்து 8.9 வரை பதிவாகி உள்ளன. இந்த பூகம்பங்களால் மலைகளின் மேல் பகுதியில் அதிக சேதம் ஏற்படாததால் இவை பார்வையற்ற பூகம்பங்கள் (BLIND EARTH QUAKES) என அழைக்கப்படுகின்றன.
மீண்டும் இமயமலைப் பகுதிகளில் பெரிய பூகம்பங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக பல அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இது குறித்து பெங்களூருவில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையம் சார்பில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இந்த ஆய்வை மையத்தின் பூகம்பவியல் நிபுணர் ராஜேந்திரன் நடத்தினார். அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி ‘இமயமலையின் அடியில் உள்ள டெக்டானிக் தகடுகளில் பல இடங்களில் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் மேற்கு நேபாளத்தின் மோகன கோலா, இந்தியாவின் சோர்காலிய ஆகிய பகுதிகளில் உள்ள டெக்டானிக் தகடுகளில் இந்த அழுத்தத்தால் பெரும் பிளவுகள் உண்டாகி இருக்கின்றன. இயமலையின் மத்திய பகுதிக்கு அடியில் இவைகள் உள்ளன.
ஆகவே எதிர்காலத்தில் இந்த பகுதியில் மிகப்பெரிய பூகம்பங்கள் விரைவில் ஏறட வாய்ப்புண்டு. இவை ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளிகளோ அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கக்கூடும். தற்போது டெக்டானிக் தகடுகளில் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருவதால் எந்த நேரத்தில் பூகமபம் வெடித்து பெரும் நாசம் விளையும். அதனால் இங்குள்ள மக்களை காக்க இப்போதில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.