சீன பெருஞ்சுவர் என்ற ஒன்று 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மங்கோலியாவிலிருந்தும் மஞ்சூரியாவிலிருந்தும் வந்த படையெடுப்புகளிலிருந்து சீன பேரரசை காப்பதற்காக கட்டப்பட்ட அரண் ஆகும். இந்த சுவரின் முக்கிய நோக்கமே ஆட்கள் நுழைவதை தடுப்பதாகும்.
இந்த சுவரை பேரரசர் ஹுவாங்க் கட்டினார். கடந்த 1987-ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஒன்றாக அறிவிக்கப்பட்டது. கொரியா எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கி.மீ தூரத்துக்கு நீண்டு செல்கிறது.
சிறப்பு வாய்ந்த
நடமாட்டம்இத்தகைய சிறப்பு வாய்ந்த சீன பெருஞ்சுவரில் 30 சதவீதம் அளவுக்கு மணற்புயலினால் அரிப்பு ஏற்பட்டு பெரும் அபாயத்தில் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான ஒன்று
ஆளில்லா விமானம்
அதில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். எனவே சீன அதிகாரிகள் எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய சிறிய ஆளில்லா விமானத்தை பணியமர்த்த சீனா முடிவு செய்துள்ளது.
பகுதிகள்
முப்பரிமாண
இந்த ஆளில்லா விமானங்கள் பெருஞ்சுவரின் பல்வேறு பகுதிகளை படம் பிடித்து அளவுகளை துல்லியமாக குறித்து காண்பிக்கும். இதற்காக இன்டெலின் ஃபால்கான் 8+ என்ற முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கும் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
சீன அரசு
பாதுகாப்பு நடவடிக்கை
ஜூன் 2003 வரை சீன அரசு சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது.