உதகை, அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இறகுப் பந்து மற்றும் மேஜைப் பந்து போட்டிகள் மட்டும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. தடகளம் உள்ளிட்ட மற்ற விளையாட்டுப் போட்டிகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இப்போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசீலா முன்னிலையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் தொடக்கிவைத்தார்.
இப்போட்டிகளில் பள்ளிக்கல்வித் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவத் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மற்றும் நில அளவைத் துறை ஆகியவற்றைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
இறகுப் பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில், பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த எம்.சுரேஷ்குமார், ஆர்.தர்மலிங்கம், எஸ்.ராஜேஷ், எஸ்.டேவிட் பால்ராஜ் மற்றும் டி.ரங்கன் ஆகியோர் அடங்கிய அணி முதலிடத்தைப் பிடித்தது. மருத்துவத் துறையில் பிரவீன், லோகேஷ், ராஜ்குமார், நாகராஜ், ஜான் கிறிஸ்டோபர் ஆகியோரைக் கொண்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
இதேபோல, மகளிர் பிரிவில் கீர்த்தனா, திவ்யா, கவிதா, விமலா ஆகியோர் அடங்கிய மருத்துவத் துறை அணி முதலிடத்தையும், வியானி ஜெனிபர் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய தோட்டக்கலைத் துறை அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
மேஜைப் பந்து போட்டிகளில், ஆண்கள் பிரிவில் ஜெயகுமார், முரளி, டேவிட் பால்ராஜ், ரமேஷ் ஆகியோர் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அணி முதலிடத்தையும், தோட்டக்கலைத் துறையின் இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையிலான கார்த்திக், முரளி, ரவி, சிவகுமார் ஆகியோர் அடங்கிய அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன. மகளிர் பிரிவில் கீர்த்தனா, திவ்யா, உதயா, கவிதா, விமலா ஆகியோரைக் கொண்ட மருத்துவத் துறை அணி முதலிடத்தையும், ஜாஸ்மின் ஷீபா ராணி, பத்மினி, சிந்தாமணி, கண்ணம்மா ஆகியோர் அடங்கிய பள்ளிக்கல்வித் துறை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன