சென்னை: ‘முதல்வர்களின் நியமனங்களுக்கு, கல்வி தகுதி ஒப்புதல் சான்று கட்டாயம் பெற வேண்டும்’ என, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.ஆசிரியர் கல்வியியலில், பி.எட்., – எம்.எட்., படிப்புகளுக்கு, மத்திய அரசின், தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது.700 கல்லுாரிகள்இதனுடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்தையும், தமிழக, பி.எட்., கல்லுாரிகள் பெற வேண்டும்.தமிழகத்தில், 700 கல்லுாரிகள், பி.எட்., -எம்.எட்., படிப்பைநடத்துகின்றன.இந்த கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையில் விதிமீறல், தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது, தகுதியான முதல்வர்களை நியமிக்காதது என, பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை படிப்படியாக சீரமைக்கும் நடவடிக்கையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர் தங்கசாமி ஈடுபட்டுள்ளார்.இதன் ஒரு பகுதியாக, அனைத்து, பி.எட்., கல்லுாரிகளும், தங்கள் கல்லுாரி முதல்வர்களின், கல்வி தகுதி மற்றும் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பெற வேண்டும் என, துணைவேந்தர் தங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, கல்லுாரிகளின் முதல்வர் பட்டியலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது.கல்வி தகுதிபட்டியலில் இடம்பெற்றுள்ள முதல்வர்களின் நியமனத்துக்கு, பல்கலையிடம் இருந்து, கல்வி தகுதி ஒப்புதல் சான்று பெற வேண்டும்.முதல்வர்கள் இல்லாத கல்லுாரிகள், முதல்வர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதுகுறித்த விபரங்களை, 31ம் தேதிக்குள் பல்கலைக்கு தாக்கல் செய்ய வேண்டும் என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.