இதல நாடுமுழுவதிலிமிருந்து 120 ஆசிரியர்கள் கலந்துகிட்டிருக்காங்க..
தமிழகத்திலிருந்து 20 பேர் கலந்துக்கிட்டிருக்கோம்..இந்த பணிமனைல, தினமும் 2 மாநிலங்கள் தங்கள் மாநில கலாச்சாரத்த வெளிபடுத்துற நிகழ்ச்சிகள
பலவடிவங்கள வெளிப்படுத்தராங்க.
நேத்து நம்ம முறை…
தமிழகத்துல இருந்து வந்திருந்த ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து, தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்ட வெளிபடுத்துற மாதிரி நிகழ்வுகள அசத்தலா கொடுத்து,எல்லாரையும் அன்னாந்து பாக்கவெச்சிட்டோம்..
அதலையும் *செஞ்சி கல்விமாவட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு* அனைவரும் ஆச்சிரியப்படற அளவுக்கு இருந்தது.குறிப்பா அரியநல்லூர் பட்டதாரி ஆசிரியர் திருவேங்கட பெருமாள் சாரின் கை வண்ணத்தில் உருவான கலைப்பொருட்கள் தமிழகத்தின் கலாச்சாரத்த கண்முன்னே கச்சிதமாய் காட்டியது.
நம்ம ஊரு பெண்கள் கோலம் போடருதல ஆரம்பிச்சி,கொண்டபோடவரைக்கும் சொன்னது மட்டுமில்லாம விவசாயம், விருந்தோம்பல், பண்பாடு,பழக்க வழக்கம்,கால்நடைவளர்ப்பு,தமிழர்களின் வாழ்க்கைமுறை, அறுவடைத்திருவிழா, பாரம்பரிய விளையாட்டுகள், கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,புலியாட்டம், நாடகம், பாட்டு,தெருகூத்து, சல்லிக்கட்டுனு ஒரு கலக்கு கலக்கிப்புட்டோமில்ல.அதலையும் பிளாஸ்டிக் விழிப்புணர்வ புகுத்தி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மன்றத்தின் துணிப்பையை கொடுத்து, எல்லாரையும் துணிப்பை பயன்படுத்த சொன்னது நாடுமுழுவதும் நச்சுனு போய்சேர்ந்திடிச்சி.
பயிற்சியில கலந்துகிட்டவங்கல இருந்து, பயிற்சி தரவுங்க வரைக்கும் தமிழ்நாடு,தமிழ்நாடு,தமிழ்நாடுனு சொல்லிக்கிட்டே இருக்காங்க…
ஆனா ஒன்னு இந்த இந்தி, தெரியாம,நாங்க படர கஷ்டமிருக்கே வெளிய சொல்லமுடியல…
நம்ம தமிழ்நாடு நிகழ்வுகல எல்லாத்தையும் ஒருங்கிணைக்கிற வாய்ப்பு மட்டுமில்லாது,, தமிழக கலையான தெருக்கூத்த, அழகா வெளிபடுத்துற வாய்ப்பும் எனக்கு கிடைச்சத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு….
தமிழன் என்ற சொல்லடா,
தலைநிமிந்து நில்லடானு, சும்மாவா சொல்லியிருக்காங்க….
நன்றி…
தமிழ்நாடு ஆசிரியர்கள் குழு
CCRT-2018-அஸ்ஸாம்.