விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டவறிதற்கான சரிபார்ப்பு பணிகள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட தற்காலிக பகுதிநேர பயிற்றுனர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., முனுசாமி தலைமையில் 9 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.இப்பணி 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1,072 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றது. இப்பணியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர், அலுவலக எழுத்தர் ஈடுபடுகின்றனர்.