நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு கடற்பகுதியில்145 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டதாக தெரியவந்துள்ள நிலையில் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
நியூசிலாந்து கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் அவ்வப்போது கரையொதுங்குவது வழக்கமான சம்பவங்களாக உள்ளன. இந்த நிலையில் நேற்று நியூசிலாந்தின் வடக்கு தீவான ஸ்டூவர்டில் அமைந்துள்ள மேசான் கடற்கரையில் குள்ள வகை மற்றும் பைலட் வகையிலான 145 திமிங்கலங்கள் ஒதுங்கின. அவற்றில் 50 சதவீதம் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவையும் காப்பாற்றுவதில் சிரமம் என ஆதவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ளவற்றை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற உள்ளன என கூறப்படுகிறது.
இதே போல டவுட்புல் கரையில் ஒதுங்கிய ஸ்பெர்ம் வகை திமிங்கலம் ஒன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்தது. மேலும், மற்றொரு குள்ள வகை பெண் திமிங்கலம் ஒன்றும் இறந்துள்ளது.
அறிய வகை திமிங்கலங்கள் பல்வேறு நோய் பாதிப்பு, வேகமாக வீசும் காற்று, அதனால் புலம்பெயர்வதில் ஏற்படும் தவறுகள், புவிஇயல் மாற்றங்கள், மற்ற உயிரினத்தின் மீதான அச்சம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இவை கரையோரம் ஒதுங்குகின்றன என கூறப்படுகிறது. எனினும் கரை ஒதுங்குவது குறித்த முழுமையான தகவல் தெரியவில்லை.