01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் பல மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 531 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களது பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நமது மாநில அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு பெற்ற அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.