பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு | நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வெளியிடப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டால் போதும். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு 4 முதல் 6-ம் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாகச் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.