சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் டிச. 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் மழை பெய்ய துவங்கும். டிச. 4 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும்.