வரும் 2019 மே மாதம் நீட் தேர்வு நடக்க
உள்ளது. அதற்காக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரை நீட் பயிற்சி மையங்களில் சேர்க்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது.
இதன்படி கடந்த 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்பேரில் மாணவர்கள் நீட் பயிற்சி பெற விண்ணப்பிக்கின்றனர். இது தவிர இன்னும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இனம் கண்டு தக்க ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளை செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்