பள்ளிச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பையின் எடை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பையின் எடையின் அளவு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகைப்பை ஒன்றரை கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும், மொழிப்பாடம் மற்றும் கணிதம் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் எனவும் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் புத்தகப்பை 2 முதல் 3 கிலோ எடையுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மொழிப்பாடத்துடன் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கணிதம் மட்டுமே கற்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பயின் எடை 4 கிலோவிற்கு மிகாமலும், 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணாவர்களின் புத்தகப்பையின் எடையளவு நான்கரை கிலோ அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 5 கிலோ மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.