நட்சத்திரங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்த போட்டான்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் வரலாறு முழுவதும் அவற்றை சுற்றி விண்வெளியில் உள்ள தூசுக்களின் மொத்த எண்ணிக்கை தான் இந்த பிரம்மாண்ட எண். இந்த எண் மிக பிரமாண்டமாக இருக்கும் என நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம், அதுபோலவே அனைத்து வகையிலும் ஒப்பிட முடியாத வகையில் பரந்துவிரிந்துள்ளது. ஒரு ஒப்பீட்டிற்காக , பிரபஞ்சம் முழுவதும் எவ்வளவு அணுக்கள் உள்ளது எனப் பார்த்தால், சிறிய அளவிலான வேறுபாடுதான் உள்ளது.
அஜீலோஇந்த எண்ணை கணக்கிடுவதன் மூலம் அஜீலோ மற்றும் அவரது குழு நடத்தும் புதிய ஆய்வுகளுக்கு சில பலன்களை வழங்கும். ‘ஊடுருவும் பின்னணி ஒளி'(extragalactic background light) என அறியப்படும் நட்சத்திர ஒளியின் தகவல்கள் மூலம், பிரபஞ்ச வரலாற்றில் நட்சத்திரங்கள் உருவான விகிதத்தை கண்டறியும் கோட்டுபாடுகளை இவர்கள் ஆராய்கின்றனர்.
‘ஊடுருவும் பின்னணி ஒளி’ என்பது நட்சத்திரங்களில் உள்ள தூசுக்களை போல அங்கேயே சுற்றி வராமல், வெளியேறி விண்வெளிக்கு வரும் அகச்சிவப்பு, ஆப்டிகல் மற்றும் புற ஊதாக்கதிர் கலந்த ஒரு கலவை ஆகும். “எங்கும் நிறைந்திருக்கும் இந்த நட்சத்திர ஒளியானது, நட்சத்திரத்தில் இருந்து தப்பித்து வருவது” என்கிறார் அஜீலோ. ஆனால் இவை மிக மெல்லியதாக பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளதாலும், பூமிக்கு அருகில் பிரகாசமான ஒளி நிரம்பியுள்ளதாலும், ஊடுருவும் பின்னணி ஒளியை கணக்கிடுவது மிகவும் கடினமானது. ஆனால் இவர்கள் கருந்துளைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பிளேசர்ஸ் எனும் ஒரு வகை கேலக்ஸியை பயன்படுத்தி, ஊடுருவும் பின்னணி ஒளியை ஆராயவுள்ளனர். ப்ளேசர்ஸ் மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த காமா ரே போட்டான்கள் பற்றிய தரவுகளை நாசாவின் பெர்மி காமாரே ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் பெற்றனர்.
பிரபஞ்சம்பிரபஞ்சம் முழுவதும் எப்படி இந்த நட்சத்திர ஒளி உருவானது என கணக்கிடும் போது, அவற்றை கொண்டு எப்படி நட்சத்திரங்கள் உருவாகின என கண்டறியலாம். அதன் மூலம் பிரஞ்சத்தின் வரலாற்றையும், அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் அஜீலோ.
10பில்லியன்எனவே எப்போது நம் நட்சத்திரங்கள் பிறந்தன என்ற கேள்விக்கு, 10பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என கூறலாம். நம்மிடம் நட்சத்திர ஒளி ஆதாரங்கள் உள்ளனவே.