ஆட்சேபகரமான முறையில் கருத்து பதிவிட்டதாக கூறி, வாட்ஸ் ஆப் குருப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்த பரம் சைனி என்பவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது குழுவில் உறுப்பினராக இருக்கும் தீபக் என்பவர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஸ்லாம் என்பவர் அளித்த புகாரின் பேரில், கவால்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து, பரம் சைனி மற்றும் தீபக் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 153 (மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே மோதலுக்கு தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு கேடு விளைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.