மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு,
அகரம் ஃபவுண்டேசனின் வணக்கங்கள்.
அகரம் ஃபவுண்டேசன் “விதை திட்டம்” மூலம் 2010 – ஆம் ஆண்டிலிருந்து ,ஒவ்வொரு ஆண்டும் 12 – ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயின்ற, நல்  மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பில் சேர இயலாத,  சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின்  பட்டமேற்படிப்பிற்கான உதவிகளையும் தனிப்பயிற்சிகளையும் அளித்து நல் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.

விதை திட்டம் மூலம் கல்லூரி இறுதியாண்டு பயிலும் சுமார் 200 மாணவர்கள், தங்களது கல்லூரிகளில் நடைபெற்ற வாளாகத்தேர்வுகளில் மிகச்சிறந்த பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
2014 -2015 ஆம் கல்வியாண்டில் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற, நல்  மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பில் சேர இயலாத,  சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களையும் இதுபோன்ற  சிறப்பான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல தங்களது இன்றியமையா பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
 அடிப்படை தகுதிகள் :
  • முதல் தலைமுறை மாணவர்கள் .
  • பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் உயர்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் .
விதை திட்டம் பற்றிய விவரங்கள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன இக்கடிதத்துடன் தங்களது மேலான பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.
குறிப்பு : விண்ணப்பம் அனுப்பும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்பட மாட்டாது
 
நன்றி.
அகரம் ஃபவுண்டேசன்.

Agaram_Vidhai 2015_Notice Board

error: Content is protected !!