புதுடெல்லி,
ஜனவரி 16-ம் தேதி இந்திய அரசு “தொடங்கிடு இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா” (ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா) செயல் திட்டத்தை தொடங்க உள்ளது. இத்திட்டமானது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் ரேடியோ வழியாக தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரேடியோ வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் ’மன் கி பாத்’ முக்கிய அம்சங்கள்:-
இது 2015-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் உரையாகும். அடுத்த உரையானது 2016-ல் தொடங்கும்.
இந்தியா மிகவும் மாறுபட்டது, இங்கு பல்வேறு விழாக்கள் கொண்டாப்படுகிறது. கிறிஸ்துஸ் கொண்டாடப்பட்ட நிலையில், புத்தாண்டு விழாவிற்கு தயார் ஆகிவருகிறோம்.
புதுவருடம் மகிழ்ச்சியாகவும் வளர்ச்சியை தருவதாக இருக்கவும் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.
நம்முடைய சுற்றுலா பயணிகள் வருமிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நமது வீட்டிற்கு விருந்தாளிகள் வரும்போது, வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம். பிறகுஏன் நம்முடைய சுற்றுலா பயணிகள் வரும் இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க விரும்பக்கூடாது.
புதிய கிரமங்களுக்கு மின்சார வசதிகள் சென்று அடைந்து உள்ளது என்ற செய்தியை கேட்கையில், நமக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அளித்து உள்ளது.
மக்கள் அனைவரது மத்தியிலும் நல்ல ஐடியாக்கள், எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அனைவரது நோக்கமும் இருக்க வேண்டும்.
தேசம் முழுவதும் கிராமங்களில் மின்சார வசதிகளை செய்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையை நாம் தொடங்கியதில் இருந்து, கிராமங்களில் மின்சாரம் பெற போகிறோம் என்ற உற்சாகத்தை காண்கின்றோம்.
’பிரதமர் நரேந்திர மோடியின் மொபைல் ஆப்’ மூலம் நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்புக்கொள்ள முடியும். மக்கள் என்னிடம் அதிகமான சாத்தியமான விஷயங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜனவரி 16-ம் தேதி இந்திய அரசு “தொடங்கிடு இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா” (ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா) செயல் திட்டத்தை தொடங்க உள்ளது. இத்திட்டமானது இளைஞர்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாகும்.
இந்த திட்டம் மூலம், பல்கலைக்கழங்கள் மற்றும் இளைஞர்கள் அனைத்து என்.ஐ.டி., ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். மற்றும் பல்கலைக்கழங்களுடன் தொடர்புக் கொள்ளமுடியும்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதியை, நாம் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடி வருகிறோம். கடந்த 1995-ம் ஆண்டில் இத்தினத்தில் இருந்து தேசிய இளைஞர்கள் விழாவானது தொடங்குகிறது. இவ்வருடம் இவ்விழாவானது சத்திஷ்காரில் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் இளைஞர்கள் கலந்துக் கொள்வார்கள்.
நேரடி மானியத் திட்டம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளதால் மகிழ்ச்சி அடைகிறேன். என்றார்.
பிரதமர் மோடியின் உரையில் மேலும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிந்தன.  -thanks daily thanthi
error: Content is protected !!