சோட்டா பீம் கதாபாத்திரத்துடன், தொலைக்காட்சியில் வரும் தொடர்களையே பார்த்துகொண்டிப்பதால், குழந்தைகள் பாடங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

 

சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனமான டார்லிங் கின்டர்ஸ்லே கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, சோட்டா பீம் கதாபாத்திரம் இடம்பெறும் வகையில் 12க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த புத்தகங்களில் விளையாட்டாக ஆங்கிலம் கற்கவும், அதே வகையில் கணிதம் கற்கவும் ஏற்ற வகையில் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு தனியாகவும், 5 முதல் 7 வயது வரையானவர்களுக்கு தனியாகவும் இந்த புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏற்ற வகையில் எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் கொண்டதாக 104 பக்க அளவில் சோட்டா பீமும், நானும் என்ற பெயரிலும் ஒரு புத்தகம் தயாராகி வருவதாக தெரிகிறது.

 

சோட்டா பீம் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான பின்னணி கொண்ட தகவல் களஞ்சியம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக இந்த கூட்டு நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!