இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

வயது வரம்பு: 18 – 22க்குள் இருக்க வேண்டும். 01.02.1995 – 31.01.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

கல்வித் தகுதி: 10+2 முறையில் கணிதத்துடன் அறிவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

 

உடல்தகுதி: 157 செ.மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீட்டர் விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindian coastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்த பின்பு 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் தற்போதைய புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று இணைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதனை உடன் எடுத்துவர வேண்டும்.

 

முக்கியத் தேதி: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2016

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindian coastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

error: Content is protected !!